Monday, 3 February 2014

தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறைய பயிற்சி

தற்போதுள்ள வேலை பளுவின் காரணமாக அனைவராலும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய முடிவதில்லை. ஒரு சிலருக்கு தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். அதற்காக அவர்கள் ஜிம்முக்கு சென்று பலவிதமான பயிற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். 
பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களில் தொடைப்பகுதியில் சதை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு தொடர்ந்து ஜிம்முக்கு போக முடியாது. அதனால் பயிற்சி தொடர முடியாத போது முன்பு இருந்ததை விட அதன் பின்னர் அதிகளவு எடை கூடும். 





இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. 1 மாதத்தில் உங்கள் தொடைப்பகுதியில் உள்ள சதையில் அளவு குறைந்திருப்பதை காணலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்வது சற்று கடினமானது. 

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை சேர்த்து வைத்து நேராக நிற்கவும். கைகளை மேல் நோக்கி தூக்கியபடி கும்பிட்ட நிலையில் இருக்கவும். கும்பிட்ட நிலையில் முன்புறமாக சற்று குனியவும். கால் முட்டியை சற்று மடக்கவும். கால் பாத முன்விரல்களில் உங்கள் எடை முழுவதும் இருக்கும்படி சற்று குனிந்த நிலையில் நிற்கவும் (படத்தில் உள்ளபடி). 

இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். முதல் வாரம் முழுவதும் 3 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிகையின் அளவை அதிகரித்து 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் கால் தொடைப்பகுதியில் சதைப்பகுதி இழுக்கப்படுவதை போன்ற உணர்வு ஏற்படுவதை காணலாம்..

No comments:

Post a Comment