சில நேரங்களில் யாருக்கு அனுப்பக் கூடாதோ அவர்களுக்கு தவறுதலாக மெயில்களை அனுப்பி விடுவோம்.
உடன் வேலை செய்யும் நண்பருக்கு அனுப்ப வேண்டியதை கம்பெனி பாசிற்கு அனுப்பிவிடுவார்கள். இதனால் பலருக்கு வேலையே போய்விடும்..
நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியதை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இதனால் பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படும்..
ஒரு நண்பருக்கு அனுப்ப வேண்டியதை வேறு ஒரு நண்பருக்கு அனுப்பி இருவருக்குள் சண்டை ஏற்படும்..
அனுப்பிய அடுத்த நோடி தான் நமக்கு தெரியும் நாம் தவறுதலாக மாற்றி அனுப்பிவிட்டோம் என..
அல்லது அனுப்பிய மெயிலில் ஏதாவது முக்கியமான விசயத்தை விட்டிருப்போம். என்ன இது கூட தெரியலயே என நினைத்துக் கொள்வார்களோ என்பதற்காக மீண்டும் அதே மெயிலை திருப்பி அனுப்ப முடியாமல் போகும்.
இதனால் நில நேரங்களில் நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும்..
இனி கவலை இல்லை..
தவறுதலாக அனுப்பிய மெயில்களை அது sent ஆன பிறகும் கூட அனுப்பியவருக்கு போகாமல் தடுக்க முடியும்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.
இன்றைக்கு பெரும்பாலானோரால் பயன்படுத்ததுப்படுவது ஜிமெயில். இதில் நாம் அனுப்பிய மெயில்களை திரும்ப பெறும் வசதி உள்ளது.
இதற்கு பின்வரும் படத்தில் வருவது போன்று Settings க்கு சென்று Laps – இல் click செய்யுங்கள்.
இப்போது “Undo Send” என்பதை enable செய்யவும். பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற option யை தேர்வு செய்து அனுப்பிய மெயிலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இந்த undo என்ற ஆப்சன் சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த Undo ஆப்சன் தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changes யை click செய்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு 30 வினாடிகள் வரை நீங்கள் அதை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். 30 வினாடிக்குள் undo ஐ கிளிக் செய்தால் யாருக்கு அனுப்பினோமோ அவரது இன்பாக்ஸ்சில் இருந்து மெயில் மறைந்துவிடும்..
இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள் தங்களை தேடி வர எமது அப்படியா பக்கத்தை like செய்யுங்கள்.