Monday, 3 February 2014

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்..!

முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது. 
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. 
தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். 

முன்பு ''தேஜாமஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.
பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.




ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற கோயில்கள், மாளிகைகள் போன்றவற்றில் முகலாய மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்களைவழக்கமாக புதைத்து வந்துள்ளனர் . முகலாய மன்னர்கள் ஹிமாயூன், அக்பர், எத்மத்உத்தௌலா, சப்தர்ஜத் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை இதற்கு சான்றாக காட்டுகிறார் அந்த பேராசிரியர்.

தாஜ்மஹால் என்ற பெயரை எடுத்துக்கொள்கிற போது ஆப்கானிஸ்தான் முதல் ஆல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் ''மஹால்'' என்கிற பெயர் எந்த கட்டிடத்திற்கும் கிடையாது.மும்தாஜின் முழுபெயர் ''மும்தாஜ்உல்ஜமானி'' ஆகும். மும்தாஜின் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டியிருந்தார் என்றால் மும்தாஜ் என்ற பெயரில் இருந்து மும் என்பதை நீக்கிவிட்டு தாஜ் என்பதை மட்டும் நினைவுச்சின்னத்திற்கான பெயரில் ஏன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பி.என்.ஓக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- -ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தவர். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கிறார். ஐரோப்பிய நாட்டு முதல் சுற்றுலாப் பயணியான அல்பர்ட் மாண்டேஸ்லா என்பவர் 1638ம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா வந்திருந்தார், இவரது பயண குறிப்புகளில் ஆக்ரா பற்றி விரிவாக ஏழுதப்பட்டுள்ளது. ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவது சம்பந்தமாக எந்த குறிப்புகளும் அதில் இடம் பெற்வில்லை.

அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.

தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது அனைத்தும் இது ஒரு இந்துகோயிலுக்கு குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ''தாஜ்மஹால் உண்மையான வரலாறு'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. தாஜ்மஹால் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமானால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச தொல்லியியல் நிபுணர்களை கொண்ட குழுவின் மூலமாக ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பேராசிரியர் ஓக்.

இந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

தாஜ்மஹாலை நேரில் பார்த்திருக்கிறீர்களா?... பாருங்கள் உங்களுக்கு எந்த வயதாக இருந்தாலும் காதல் பற்றிக்கொள்ளும்.

No comments:

Post a Comment