சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !
உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.
உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.