Sunday, 2 February 2014

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.

"அழகானவர்கள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத மனிதர்களே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் சிலர் வாழ்க்கையே வெறுத்து விடுவார்கள்.
"வெண்புள்ளி" நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகி விடுவார்கள். மேலும் மனதிற்குள் அழுவது, சிலருக்கு கைவந்த கலை.
"உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும்".





சிகிச்சை முறை:-

“காலையில் வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கை பிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கி வரவேண்டும்.
“நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.
பத்தியம்:- "வெள்ளை சர்க்கரையை (White Sugar) எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது"...
(அனுபவப்பட்டவர்களின் கட்டுரையை சுருக்கி சிறிதாக்கி பதிந்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்ட யாருக்கேனும் உபயோகமாக இருக்குமே என்ற நோக்கத்தில்)

No comments:

Post a Comment