Sunday, 2 February 2014

தமிழ் கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை

படித்ததும் குருதி கொதிக்கிறதா? 'நீதான் தமிழன்' சுமார் நூறு வருடங்களாக பதிப்பிக்கப்படாமல் கர்நாடகாவில் சிக்கியுள்ள தமிழ் கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. கல்வெட்டு தலைமை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாறியதன் விளைவாக ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படா மலே அழிந்து போய் விட்டதாகப் புகார் கிளம்பி உள்ளது. இது குறித்து 'காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?' என்ற தலைப்பில் கடந்த 18.06.06 தேதியிட்ட ஜுவி இதழில் வெளியான கட்டுரையின் ஃபாலோ அப் செய்தி... நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர். கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்ப ட்டு 'படி எடுத்தல்' முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI. 




இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கண்ணிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்காக ASI மைசூர் அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது. இதில், பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் என்பதால், மாற்றான் தாய் மனப்பான்மையோடு மைசூர் அலுவலகம் நடந்து கொள்வதாகப் புகார் கிளம்பியது. ஜூ.வி கட்டுரையில் இதை தெரிவித்திருந்த உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரயர் எஸ்.சாந்தினி பீ, 'தமிழகத்திற்கு காவிரி நீரைத்தான் கொண்டு வர முடியவில்லை, கல்வெட்டுகளையாவ து கொண்டு வரலாமே?' என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்தநிலையில், மைசூரில் சிக்கியுள்ள தமிழ் கல்வெட்டுகளின் தற்போதைய நிலை அறிய இந்திய கல்வெட்டியலாளர்கள் (Epigraphists) மற்றும் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ள முயன்றோம். இவர்களின் முக்கிய அமைப்பான இந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) 38 ஆவது மாநாடு சமீபத்தில் அலகாபாத் பல்கலைகழகத்தில் நடந்தது. அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆஜராகி இருந்தவர்களை நாம் நேரில் சந்தித்து பேசினோம். ''ஜூவியில் செய்தி வெளியானவுடன் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இதற்கான சில முயற்சிகள் செய்தார். அதன்படி, சென்னையில் துவக்கப்பட்டு கர்நாடகாவிற்கு கொண்டுப் போகப்பட்ட கல்வெட்டியல் தலைமையகத்தை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வருவது அல்லது சென் பெயரளவில் இருக்கும் கிளை அலுவலகத்தை ஆய்வுக்காக உயர்நிலைபடுத்து வது என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு இறங்கியது. இதற்காக அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா மற்றும் இந்த துறையின் மத்திய அமைச்சராக இருந்த அம்பிகா சோனிக்கும் மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையை தமிழகத்திற்கு மாற்றும்படியும், தமிழ் கல்வெட்டுக்கு என தனியாக ஒரு மத்திய கல்வெட்டு அலுவலகத்தை சென்னையில் துவங்கும்படியும் தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், இவர்களால் பரிந்துரைக் கப்பட்ட கடிதங்களை மைசூர் அலுவலகத்தின் அதிகாரிகள் சாக்கு, போக்கு சொல்லித் தட்டிக் கழித்து விட்டார்கள். அதேசமயம், மைசூர் அலுவலகத்தில் ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படித்து தொகுக்க உதவும்படி தமிழ்நாடு தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) உத்தரவிட்டு சில லட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு. அப்போது TNSDA . யின் கமிஷனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதை வெளியிட ASI, ஐந்து வருடம் எடுத்து கொண்டது. இதுவும் முடியாமல் அடுத்த கட்டமாக, ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல் (Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர் அலுவலகம் சம்மதித்தது. இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்த போன படிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது. இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம் திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.' என நம்மிடம் வருந்திய தமிழரான டாக்டர்.எஸ்.சாந ்தினி பீ மேலும், ஒரு அதிர்ச்சியான தகவல் அளித்தார். கல்வெட்டுக்களை படிக்க முறையான கல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்தது. இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது. பணியில் இருந்த சில கல்வெட்டியலாளர் களுக்கும் பதவி உயர்வு, காலத்தே கிடைக்கவில்லை. தற்போது தமிழ் கல்வெட்டியலாளர்கள் மைசூரில் இருவர் மட்டுமே உள்ளனர். இதில் ஒருவர் விரைவில் ஓய்வு பெறப் போகிறார். இந்த தலைமையகத்திற்கு இயக்குநர் பதவியும் பல வருடங்களாக காலியாகவே உள்ளது. இதுவன்றி, இரண்டு துணை இயக்குநர் மற்றும் பல உதவி கல்வெட்டியலாளர்கள் பணியும் நிரப்பப்படாமலே உள்ளது. சென்னையின் கிளை அலுவலகத்தில் உள்ள மூன்று தமிழ் கல்வெட்டியலாளர்கள் பதவியும் காலியாகவே உள்ளது. தெலுங்குக்கு ஒருவரும் கன்னடத்திற்கு ஒருவர் மட்டுமே தமிழக கிளை யில் உள்ளனர். சரி! இவர்கள் தான் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக புகார் கூறப்பட்டாலும் TNSDA விலும் இதேநிலை. இங்கும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டியலாளர்களுக்கான பதவிகள் பல வருடங்களாக காலியாக உள்ளது. இத்தனைக்கும் ASI மற்றும் TNSDA சார்பில் ஒரு வருட பி.ஜி டிப்ளமா பயிற்சி பெற்று ஒவ்வொரு வருடம கல்வெட்டியல் மாணவர்கள் தயாராகிறார்கள். இவர்களுக்கு உரிய காலத்தில் கல்வெட்டியலாளர் பணி கிடைக்காமையால் வேறு பல பணிகளுக்கு சென்று விடுவதால் தற்போது தமிழ் கல்வெட்டுக்கள் படிக்கவும் அனுபவசாலிகள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.' என்றார். இதே பிரச்சனை குறித்து நம்மிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன், 'மார்ச், 2008 ல் மைசூர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது அங்கு படி எடுக்கபட்டு வைத்திருந்த பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன. இவை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் ஒரிஜினல் கல்வெட்டுகளை கோயில், குளம் என தேடுவது முடியாத காரியம். இந்த அஜாக்கிரதைக்கு முக்கியக் காரணம், தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களிடம் உள்ள இனவெறியே. இதே பிரச்னை தற்போது கேரளாவிலும் உருவாகி வருகிறது. இம்மாநிலத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுக்களே. எனவே, அதை கேரளா அரசின் தொல்லியல் துறை பதிப்பிக்காமலும், அதை மத்திய அரசிடம் ஒப்படைக்காமலும் இருக்கிறது. இதற்காக நான் எனது சொந்த செலவில் சென்று வந்து போராடியும் பயன் எதுவும் இல்லை. இவைகளை தமிழக அரசு கேரளத்திடம் கேட்டு வாங்கி உடனடியாக பதிப்பித்தால் தென்னிந்திய வரலாறு குறித்த பல அரிய உண்மைகள் வெளியாகும்.' எனத் தெரிவித்தார். அலகாபாத் வந்திருந்த மைசூரின் ASI அதிகாரிகளிடம் இந்த பிரச்னை குறித்து நாம் பேசியபோது அதிகாரப்பூர்வமாக பேச மறுத்த அவர்கள், ''இது ஒரு பெரும் குறைதான் என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால், இந்தக் குறையை பெரிது படுத்தக்கூடாது. நாம் இட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தஞ்சை தமிழ் பல்கலைகழகம் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால்தான், டிஜிட்டல் பணியை ASI தற்போது தனியாரிடம் கொடுத்துள்ளது. கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படாமல் தாமதமாவதற்கு ஆள் பற்றாக்குறையே காரணம். நீங்கள் நினைப்பது போல் கல்வெட்டுகளை தொகுத்து பதிப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு அணுகுமுறை மிகவும் முக்கியம். இந்த துறையில் பழுத்த அனுபவம், சிறந்த அறிவுடன் பல்வேறு கோணங்களுடன் ஆராயும் நுண்ணறிவு அவசியம். (துவக்கத்தில் இதை ஆங்கிலேயர்கள் செய்தது எப்படி?) இடையில் ஒரு பத்து வருடங்களுக்கு கல்வெட்டியலாளர் கள் பதவிக்கு யாரும் எடுக்கப்படவில்ல ை என்பதால், திறமையும் அனுபவமும் கொண்டவர்கள் தற்போது பணியில் இல்லை. இதனால், ஓய்வு பெற்றவர்களை வைத்தே தொகுக்கும் பணி ஆமை வேகத்தில் தொடர்கிறது. இதற்கு முழு பொறுப்பு டெல்லியிலுள்ள எங்கள் தலைமை அலுவலகம்தானே தவிர நாங்கள் இல்லை. தற்போது அதன் தலைமை அதிகாரியான டைரக்டர் ஜெனரல் பதவியே நிரப்பப்படாமல் ஆக்டிங்காக ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.'' என்று தங்கள் பங்கிற்கு புலம்பினர். இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழே. மற்றவை சமஸ்கிருதம், பெர்ஷியன் (பாரசீக மொழி), அரபி, கன்னடம் மற்றும் மலையாளம். இதில், தமிழ் தவிர மற்ற அனைத்து மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. அதிகபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளில் அவை முடிந்து விடும். கடைசியில் தமிழ் கல்வெட்டுகள் தங்கி அவை, அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்! நன்றி: தமிழரின் வரலாறு (முகநூல்)

No comments:

Post a Comment