Sunday, 2 February 2014

பெண்களுக்கு உண்மையை பேசும் ஆண்களைத் தான் பிடிக்கும்

உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்றால் அது பொய் சொல்வது தான். பொதுவாக காதல் செய்யும் போது ஆண்கள் நிறைய பொய் சொல்வார்கள். ஆனால் பெண்களால் காதலன் எப்போதும் பொய் சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதன் காரணமாகவே பல காதல் பாதியிலேயே முறிந்து விடுகிறது. 


முதலில் காதல் செய்யும் போது ஒருவர் பொய் சொன்னால், அதற்கான காரணத்தை அமைதியாக கேட்டுத் தெரிந்து கொண்டு, பின் எதையும் முடிவு செய்ய வேண்டும். சில நேரங்களில் காதலன் பொய் சொல்வதற்கு காரணம், காதலி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இருக்கும்.
ஆனால் பெண்களுக்கு உண்மையை பேசும் ஆண்களைத் தான் பிடிக்கும். ஆகவே அப்படி பலமுறை உங்கள் காதலனிடம் எச்சரித்தும், உங்கள் காதலன் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் என்பதை கண்டுப்பிடிக்க சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்...
* ஆண்கள் பொய் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். ஆகவே அப்படி நீங்கள் கேள்வி கேட்கும் போது, உங்கள் காதலன் உங்கள் கண்களைப் பார்த்து பேசாவிட்டால், அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். அப்போதே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் காதலர் பொய் சொல்கிறார் என்பதை.
* காதலன் உங்களிடம் பொய் சொன்னால், முதலில் அவரது செல்போனை உங்களிடம் இருந்து மறைந்து வைப்பார்கள். மேலும் கேட்டாலும், அதனைக் கொடுக்காமல் கவனத்தை திசைத்திருப்புவார்கள்.
* எப்போதும் சாதாரணமாக பேசும் காதலன், திடீரென்று அளவுக்கு அதிகமாக மற்றும் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டால், எதையோ மறைக்கிறார் என்று அர்த்தம். மேலும் அது என்னவென்று கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதோ பேசுவார்கள்.
* போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு சரியாக பதிலளிக்காமல், போனை அணைத்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து பதிலளித்தால், அதுவும் பொய் சொல்வதற்கு தயாராகிறார்கள் என்று அர்த்தம்.
- மேற்கூறியவாறெல்லாம் நடந்தால், அவரசப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், உங்கள் காதலனிடம் வெளிப்படையாக பேசி காரணத்தை தெரிந்து கொண்டு பின் முடிவெடுங்கள். குறிப்பாக இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment