Friday, 25 October 2013

சிவலிங்கத்தின் அர்த்தம்....

ஒவ்வரு குருவும் ஒவ்வரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள் .     நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக  உள்நாக்கில் இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது .அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம் .இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .

எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாகபிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன் ,நடுபக்கம் விஷ்ணு ,அடிப்பக்கம் பிரம்மா .என்று சிவலிங்கத்தை கூறுவர் .அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம் . உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும் ,வாசியோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம் . அதனால் தான் கபாலம் வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது . நன்றாக பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும் ,சிருநாக்கு லிங்கபாகம் போலவும் இருப்பதை காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே மாறிவிடுவோம்மற்ற படி ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்றுகூறுவர் .அது தவறு.

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள் ( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக் கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.
அவ் வடிவங்கள்,
அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது - >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும் -இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை -இது சகள நிட்களத் திருமேனி  எனவும் சொல்லப்படும்.
இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது, உருவம்உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர்போன்றவை. இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 )  வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள்-மகேசுவர மூர்த்தங்கள் என்று சொல்லப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே - சிவலிங்கம் எனப்படும்.
" இலிங்கம் " - என்பதற்கு குறி என்பது பொருள்,  " குறி " - என்றால் = ஒரு அடையாளம்
ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமே சிவலிங்கம் எனப்படும்.

சிவலிங்கம் = சிவ + லிம் + கம்
சிவம்இறைவர்  லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் - ஒடுங்கிய அப்பொருள்கள் ( சராசரங்கள் ) மீண்டும் தோன்றும் இடம்,
ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும் அழித்தும் அருளவும்வல்ல வடிவமே சிவலிங்கம் எனப்படும், சிவலிங்கத்தின் அடிப்பாகம் - நாற்கோண வடிவினதாய் இருக்கும் -இது பிரம தத்துவம்
சிவலிங்கத்தின் நடுப்பாகம் - எண்கோண வடிவினதாய் இருக்கும் -இது விஷ்னு தத்துவம் ( இது ஆவுடை எனப்படும் )
சிவலிங்கத்தின் மேல் பாகம் - நீண்ட வட்ட வடிவினதாய் இருக்கும் -இது சிவ தத்துவம் ( இது பாணம் எனப்படும் )
இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் - உருத்திரனும், இந்த பாணத்தின் நடுப் பாகத்தில் - ஈசுவரனும்,
இந்த பாணத்தின் மேல் பாகத்தில் - சதாசிவனும்,இருக்கிறார்கள்.
இந்த சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும்அவை,
1.   பரார்த்த லிங்கம்-( திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத் தக்க வகையிலே கருவறையில் எழுந்தருளியிருப்பது )
2.  ஆன்மார்த்த லிங்கம் அல்லது இஷ்ட லிங்கம்-( விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை பெற்று இல்லத்தில் வைத்து பூசிப்பது )
விஞ்ஞானிகள் அணுவை ( எலக்ட்ரான் ) ஆராய்ச்சி செய்த போது,அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும்,அதன் மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்,இந்த பச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை.இத்தகையை அற்புதமான இலிங்க வடிவத்தை, தமது ஞானக் கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் ,

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தாராய்.

- எம்பிரான் சாக்கிய நாயனார் புராணம் : 8

என்று குறிப்பிட்டு அருளியிருப்பதை சிந்தித்து வியக்கலாம்.
ஆக நம்பொருட்டு இறைவன் எடுத்து அருளார்ந்த நிலையிலே திருக்கோயில்களில்வீற்றிருக்கும் இலிங்கத் திருமேனியை தரிசிப்போம்..  உய்வு பெறுவோம்.