சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன்
என்ற மன்னனின்
மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.