Thursday, 6 February 2014

கள்ளத் தொடர்பு கொண்டுள்ள துணையை எதிர்கொள்ள சில வழிமுறைகள்!!!

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷயம். அதுவும் உங்களுடைய துணையாக இருப்பவர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனிதமான உறவுகளுக்கு துரோகம் செய்து விட்ட நேரங்களில் அது மிகவும் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது. மேலும் உங்களுடைய துணைவரை மறுபடியும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட்கொள்ளும். பாதுகாப்பின்மையும், குழப்பமும் எங்கெங்கிலும் தலைதூக்கியிருக்கும் மற்றும் இந்த நிலையிலிருந்து நீங்கள் வெளியேற முடியுமா என்பதும் கூட பதில் தெரியாத கேள்வியாக இருக்கும். 'அவள்/அவர் ஏன் உங்களை ஏமாற்றினார்?' என்ற கேள்வி உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்குமாதலால், அதற்கு பதில் கிடைக்கும் வரை உங்கள் விழிகள் மூடாது.



 சில நேரங்களில், இந்த உறவுகள் உங்களை விட்டுப் போவதை உங்களால் தடுக்க முடியும் என்ற போதிலும், நீங்கள் கொடுத்த பதில்கள் அதனை பாழ்படுத்தி இருக்கும். நீங்கள் உண்மையிலேயே அந்த உறவிற்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், அந்த சூழலை எதிர்கொள்ள சில வழிகள் உள்ளன. அது போன்ற சில பயனுள்ள வழிகளை இங்கே கொடுத்துள்ளோம். 

ஆலோசகர்கள் தேவை:
 கள்ளத் தொடர்பு விவகாரங்களை எதிர்கொள்ளும் போது உங்களுக்கு மூன்றாவது நபரின் உதவி தேவைப்படலாம். ஒரு ஆலோசகரை அணுகுவது சிறந்த யோசனையாக இருக்கும். நீங்கள் அதை எப்படி உணருகிறீர்கள் என்பதை ஒரு ஆலோசகரிடம் வெளிப்படுத்தும் போது தான், உங்களைத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
.
குற்றம் சொல்லத் தேவையில்லை :
குற்றம் சொல்வதன் மூலமாகவே பாழாகி விட்ட உறவுகள் பல உள்ளன. ஒருவரையொருவர் குற்றம் சொல்வதை தூர ஒதுக்கி விட்டு, உறவுகளின் அடிப்படையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எது நடந்து விட்டதோ அதை திரும்பக் கொண்டு வர முடியாது. சும்மா உட்கார்ந்து கொண்டு குறை கூறிக் கொண்டிருப்பது யாருக்கும் உதவப் போவதில்லை.

 பிரச்சனையின் ஆழம்:
 உங்களுடைய உறவில் உள்ள பிரச்சனைகளுடன் போராட வேண்டிய தருணம் இது. உங்களுடைய துணைவருடன் நீங்கள் கொண்டிருக்கும் இந்த மிகவும் புனிதமான இந்த உறவில் எது தவறான விஷயமாக உள்ளது? எங்காவது சரியான தொடர்பு இல்லையென்று நினைத்தால், நீங்களிருவரும் ஒருவரையொருவர் திறந்த மனதுடன் பேசுவதால் சரி செய்ய முடியும். 

வெளியே சொல்லுங்கள்:
 உங்களிருவருக்குமான சூழ்நிலைகள் தவறாக இருக்கலாம். ஆனால், நீங்களிருவரும் பேசிக்கொள்ள முடியாதபடி அதனால் தடுக்க முடியுமா? மனம் விட்டு பேசுவது நிறைய பேருக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சற்றே பேசுவதன் மூலம் உங்களால் அந்த உறவை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணருங்கள். நீங்களிருவரும் பிரிந்து சென்று அழுது கொண்டிருக்கலாமா அல்லது மனம் விட்டுப் பேசி உறவை நிலைப்படுத்தலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இது தற்காலிக பிரிவாகவும் கூட இருக்கலாம் மற்றும் தவறை சரி செய்ய இன்னமும் வாய்ப்புகள் இருக்கலாம். உங்களுடைய துணைவர் என்ன நினைக்கிறார் என்பதை அவருடன் பேசினால் மட்டுமே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

 நல்ல குணங்கள்:
 உங்களுடைய உறவில் எப்பொழுதும் மோசமான விஷயங்கள் மட்டுமாகவா இருந்தது? அதில் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவித்த நாட்களும் கண்டிப்பாக இருந்திருக்கும். எனவே, உங்களுடைய துணைவியை கைபிடித்ததால் உங்களுக்கு அதிர் ஷ்டம் வந்ததாக எண்ணிய நாட்களை மறந்து விட முடியுமா? அவர் எவ்வளவு நல்ல குணங்களை கொண்டவராக உங்களுக்கு தோன்றியிருந்தார் என்பதை உணருங்கள். கெட்ட விஷயங்கள் மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருப்பதில்லை. எனவே, நல்ல விஷயங்களைப் பற்றி நினைத்திருங்கள் மற்றும் எங்கு தவறு நடந்து என்பதை அதன் மூலம் கண்டறிய முயற்சி செய்யுங்கள். சில நேரங்களில், வீட்டை விட்டு அடிக்கடி வெளியே சென்று விடுவதால் கூட, உறவின் நம்பகத்தன்மை குறையக் காரணமாகி விடும். 

பயத்தை எதிர்கொள்ளுங்கள் :
உங்களுடைய பயங்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது! அதிகபட்சம் தவறாக என்ன நடந்து விடும்? நீங்கள் மீண்டும் இதே சூழுலுக்குள்ளாகலாம். ஆனால், நீங்கள் பயத்துடன் இருந்தால், ஒரு காலத்தில் சிறந்த உறவாக இருந்த ஒன்றை இப்பொழுது அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுடைய 
பயத்தை சற்றே எண்ணிப் பாருங்கள், கோபத்தை முறைப்படுத்துங்கள் மற்றும் உணர்வுகளை சற்றே ஓய்வெடுக்கச் செய்யுங்கள். கள்ள உறவிலிருந்து விடுபட சற்றே காலமாகும். எனவே அந்த காலத்தை உங்களுக்கு கொடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபப்பட்டு பொருட்களை தூக்கி எறிவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. ஒவ்வொரு படிநிலையும் அதற்குரிய நேரத்தை எடுத்துக் கொள்ளும். சிறிது காலத்திற்கும், முயற்சிகளுக்கும் பின்னர் உங்களுடைய காதல் மீண்டும் உங்களுக்கு கிடைத்ததை அறிவீர்கள்.

No comments:

Post a Comment