Thursday 6 February 2014

வேலைகளுக்கு இடையே செய்யும் எளிய பயிற்சி


அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அடிக்கடி களைப்பு ஏற்படும். அவர்கள் வேலையில் சிறிது இடைவெளி கிடைக்கும் போது சில எளிய பயிற்சிகளை செய்து வந்தால் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.. இந்த வகையில் சில எளிய பயிற்சிகள் இங்கு உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 

• நேராக நின்று கொண்டு வலது கையை மடக்கி தோள்பட்டை வரை மடக்கி இடது கையால் வலது கை முட்டியில் தாங்கி அழுத்தவும். இவ்வாறு இடது பக்கமும் செய்யவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். 

• நேராக நின்று கொண்டு கைகளை மேல் நோக்கி தூக்கி முட்டி வரை மடக்கவும். வலது கையால் இடது கை முட்டியையும், இடது கையால் வலது கை முட்டியையும் நன்றாக அழுத்தவும். இவ்வாறு 5 நிமிடம் செய்யவும். 

• நேராக நின்று கொண்டு கைகளை பின்நோக்கி கட்டிக்கொள்ளவும். தலையை முன்னும், பின்னுமாக அசைக்கவும். பின்னர் வலது, இடது பக்கமாக அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். 

- வேலை நேரங்களின் இடைவெளியில் இந்த பயிற்சிகளை தொடர்ந்து 10 நிமிடம் செய்து வந்தால் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.

No comments:

Post a Comment