Thursday 24 October 2013

வாட்டர் தெரபி சிகிச்சை .....







உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…


காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது

No comments:

Post a Comment