Thursday 24 October 2013

யோகா செய்யும் போது ??......



                                நல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும். * சூரிய உதயத்திற்கு முன்னே காலைவேளை மனதிற்கு மிக மிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு. * யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.


                                             * வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும். * வியர்வை அதிகம் வராது. ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும். 
                                   * அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவசர வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கிய ஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும். * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும். * யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும். 
                                          * ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம். * தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும். * சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது. * ஆசனம் செய்து முடித்தபின் கடின உணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம். * மது, புகை, டீ, காப்பி, அதிக காரம், உப்பு, புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.  
                                     * உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும். * மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும். * பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை. * அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும். * யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
                                                * யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலை இவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம். அல்லது அமைதியான இசையை கேட்கலாம். * யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மை கொண்டிருக்கும் நேரத்தில் கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 
                                            * ஒவ்வொரு ஆசனத்திற்குமான மாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும். * கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment