Sunday, 2 February 2014

மிதமான குடிபழக்கம்

மதுவில் இருந்து முற்றிலும் விலகியிருக்கும் மக்களை விட மதுபானத்தை வழக்கமாக அருந்தும் மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், மது அருந்தாத மக்களின் இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருப்பவர்களாக தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் மூன்று பானங்கள் என வரையறுக்கப்பட்ட மிதமான குடிபழக்கம் உள்ள மக்கள் மிகக்குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டிருப்பார்கள் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியலாளர், சார்லஸ் ஹோலஹன், தலைமையிலான அணி ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்று 'தி இன்டிபென்டன்ட்' தகவல் அளித்துள்ளது.

ஆய்வில் மது அருந்துபவர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக அனைத்து சமயத்தின் இறப்புக்கும் இடையே தொடர்பு ஆய்வு ஒன்று அமைக்கப்பட்டது. ஆய்வில், மிதமான மது அருந்தும் மக்களுடன் ஒப்பிடும்போது மதுவில் இருந்து விலகியவர்களுக்கு 2 மடங்கு இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்றும், அதிகமாக மது அருந்துபவர்களின் இறப்பு ஆபத்து 70% அதிகரித்துள்ளது, மற்றும் லேசாக மது அருந்துபவர்களுக்கு 23% இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டது.

குடிப்பழக்கத்தில் இருந்து விலகியவர்கள் மற்றும் அதிக குடிப்பழக்கம் கொண்ட மக்கள் தங்களை மாற்றிக் கொண்ட பின், மிதமான மது அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் இறப்பு அபாயங்கள் 51% மற்றும் 45% அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

கொசு ஒரு பிரச்சனையா?
இது 100% வேலை செய்யும்...!
உங்கள் வீட்டிலில்
இருந்து கொசுக்களை விரட்ட
ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

Saturday, 1 February 2014

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” – பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. ‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

”பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.


வில்வமரம்:

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில் போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம்.



மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடவும்.!!! ???

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும்.
அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.ஆகவே இனிமேல் அவ்வாறு தெரியாமல் சாப்பிடாமல், அதைப் பற்றி தெரிந்து கொண்டு பின்பு சாப்பிடுங்கள்.



மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.
ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும்.

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா!!! ???

இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...
ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு.


அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கடைப்பிடித்து அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம்.ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும்.